அஜித் வர்தா புயல் பாதிப்புக்காக நிதி கொடுத்தாரா?

அஜித் தற்போது தல 57 படத்துக்காக பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளார். படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அவர் பற்றிய புதிய தகவல்கள் வந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. ஒவ்வொரு நாளும் ஏதாவது ட்ரெண்ட் செய்து விடுவார்கள். சமீபத்தில் முதல்வரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பல்கேரியாவிலிருந்து வந்து சென்றார்.

தற்போது அவர் குறித்து புதிய தகவல் ஒன்று சில இணையதளங்களில் பரவி வருகிறது. இதில் அவர் நேற்று வந்த வர்தா புயல் பாதிப்புக்காக 25 கோடி நிதி கொடுத்தார் என சொல்லப்பட்டுள்ளது.

இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.