திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!

காதல் எப்போது, எப்படியெல்லாம் வரும் என்று சொல்லவே முடியாது என்று சொல்வார்கள். மேலும் அந்த “காதலுக்கு கண்ணில்லை” என்ற ஒரு பழமொழி கூட உள்ளது. இவை அனைத்தையும் நம்பாதவர்கள் நிச்சயம் நம்பித் தான் ஆக வேண்டும். எதை வைத்து நம்புவது? என்று கேட்கலாம்.

இதுவரை காதல் செய்ய பெண்களுக்கு தைரியம், நம்பிக்கை எதுவுமே இல்லை என்று தான் நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில் பெண்களுக்கு தைரியம் மிகவும் அதிகம் தான். அதிலும் மேலே சொன்ன பழமோழி ஆண்களுக்குத் தான் பொருந்தும் என்று தவறாக நினைத்துள்ளோம். உண்மையில் அந்த பழமொழி பெண்களுக்குத் தான் பொருந்தும்.

அந்த காலத்துப் பெண்கள் காதல் செய்யும் போது தனக்கு வருபவர், தனக்கே சொந்தமானவராய் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் காதல் அவ்வாறு மட்டும் வராது, எந்த வயதிலும், யார் மீதும் வரும் என்பதை நமது திரையுலகில் உள்ள நடிகைகள் நிரூபித்துள்ளனர்.

மேலும் இந்த வகையான காதல் பாலிவுட்டில் மட்டுமின்றி, கோலிவுட்டிலும் நடந்துள்ளது. அதிலும் இதில் என்ன கொடுமையென்றால், இவ்வாறு திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகளை பார்த்தால் நம்பவே முடியாத அளவில் இருக்கும். ஒருவேளை இதை வைத்து தான் “காதலுக்கு கண்ணில்லை” என்று சொன்னார்களோ!!! சரி, இப்போது எந்த நடிகைகள் அவ்வாறு காதல் செய்தனர் என்பதைப் படித்துப் பாருங்களேன்…23-1353669124-rani-6010 ராணி முகர்ஜி – ஆதித்யா சோப்ரா ஆதித்யா சோப்ரா முதலில் பாயல் கண்ணாவை திருமணம் செய்து, 8 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்துள்ளார். அத்தகையவர் மீது ராணி முகர்ஜி காதல் வயப்பட்டுள்ளார்.