விஜய்யின் 61வது படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்

விஜய், அட்லீயுடன் இரண்டாவது முறையாக இணையும் படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது.

அண்மையில் படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, காமெடியனாக வடிவேலு நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் மற்றொரு காமெடி நாயகனாக சூரி நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.