நன்றி கெட்ட நடிகர் தனுஷ்..! என்மகனை சாகடித்து விட்டார்கள்..எடிட்டர் கிஷோர் அப்பா கதறல்..பட்டினி கிடக்கிறோம்..!?

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரை கதற கதற வேலை வாங்கி குடிக்கு அடிமையாக்கி கொன்று போட்ட சில சினிமாக் காரர்கள் போலவே..

தேசிய விருது பெற்ற படத் தொகுப்பாளர், இளைஞர் கிஷோரின் மரணத்திற்கும் சில சுயநல சினிமாக்காரர்களே காரணம்.

இரவு பகலாக, சூரிய வெளிச்சத்தையே பார்க்காதவர். சினிமாவை தனது உயிராக நினைத்த அந்த பரிதாப இளைஞர் குடும்பம் இன்று பசியில் வாடிக் கொண்டிருக்கிறது.

கொடுக்க வேண்டிய மீதி சம்பளத்தைக் கூட இன்னும் பலர் தரவில்லை என்பது தான் சோகம். படியுங்கள்.

எடிட்டர் கிஷோர்… சென்ற ஆண்டு மிக இளம் வயதில் மரணத்தை முத்தமிட்ட கலைஞர். கடுமையான வேலைப் பளுவில் உடல் நலனைக் கருத்தில் கொள்ளாமல் கடைசி வரை உழைத்தே, மூளையில் ரத்தக் குழாய் வெடித்து தனது எடிட்டிங் அறையிலேயே சரிந்து விழுந்து இறந்தவர் கிஷோர்.

அவரது எடிட்டிங் டேபிளில் கடைசியாக இருந்த படம் விசாரணை. அவர் உயிரைக் கொடுத்து எடிட் செய்த அந்தப் படத்துக்கு சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றார் கிஷோர்.

இதற்கு முன்பே ஆடுகளம் படத்துக்காகவும் சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றிருந்தார் கிஷோர்.

இரண்டு முறை தேசிய விருது பெற்றிருந்தாலும், மகனைப் பறிகொடுத்து நிற்கும் கிஷோரின் தந்தை தமிழ் சினிமா மீது பெரும் வருத்தத்திலிருக்கிறார்.

கிஷோரின் தந்தை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இப்படி வெதும்பியிருந்தார்:

அவன் பெருமை தேடித்தந்த சினிமாத் துறை எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. என் மகன் தேசிய விருது பெற்றிருப்பதை வெற்றிமாறனின் துணை இயக்குநர் போன் செய்து எங்களுக்கு தெரிவித்தார்.

ஆடுகளம் படம் எடுத்தப்போ தனுஷும், என் மகனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்.

ஆனால், மகன் இறந்ததிலிருந்து இன்றுவரை தனுஷிடமிருந்து எனக்கு ஒரு போன் அழைப்புக் கூட வரவில்லை. சிவகார்த்திகேயன் 2 லட்சம், சரத்குமார் ஒரு லட்சம் கொடுத்தார். ராகவா லாரன்ஸும், வெற்றிமாறனும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள்.

ஆனால், பிரகாஷ்ராஜின் இரண்டு படங்கள் வேலை செய்ததற்கு இன்னும் 3 லட்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அவரிடமிருந்து பதிலே இல்லை. அதான் இறந்துட்டானே… எதுக்கு தரணும்னு நினைச்சிட்டாங்க போல.

இந்த விருதை வைத்துக்கொண்டு என்ன பண்றது. என் மகன் விருதைத் தாண்டி எதுவும் பெறவில்லை. இரண்டு விருதுகளைத் தாண்டி இந்த சினிமா எங்களுக்கு ஒண்ணும் தரல… குறைந்தபட்சம் துக்கத்தைப் பகிர்ந்துக்கக் கூட ஆளில்ல…” இவ்வாறு கூறி கண்ணீர் சிந்தினார், அந்த அப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*